Monday, September 26, 2011


show details Aug 24
நாம் ஏற்ற தாழ்வுகளை சரி படு தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் . ஒருவருக்கு அதிகமான வருமானமும் ஒருவருக்கு குறைந்த வருமானம் வருவது மட்டும் பாதிப்பு இல்லை .அவர்கள் தேவையை அந்த வருமானம் ஈடு செய்ய வில்லை என்றால் பாதிப்பு உருவாகிறது .   ஊழலை ஒழிக்க அணைத்து மக்களுக்கும் எல்லா தேவையும் கிடைக்க செய்தல் மட்டுமே சிறந்த அணுகு முறை ஆகும் .மேலை நாடுகள்  புரட்சி வெடிக்க காரணம் அங்கு நிலவும்   ஏற்ற தாழ்வு மிக முக்கிய பங்காற்றும் ."நாம் இங்கே இவ்வளவு   கஷ்ட படுகிறோம் அங்கே அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்" என்ற எண்ணமே தனி மனிதனை ஒன்று கூடி புரட்சிக்கு வழி விட செய்குறது.அனைவர்க்கும் மான உலகத்தை எப்போது நாம் உருவாக்கு கிறோமோ அப்போது தான் மனிதன் மனிதனாக பார்க்க எல்லா மணத்திற்கும் எண்ணம் உருவாகும் . இல்லை என்றால் பணம் நாம் படைத்தது என்ற காலம் போய் நம்மை பணம் படைத்தது என்ற நிலை வரும் . இதை சரி செய்வது ஓவரு வரின் கடமை ஆகும் .  
இன்று தமிழக அரசு பல கோவில்களில் அன்ன தானம் செய்கிறது .வயிறுக்கு உணவு கொடுக்கும் அரசு அதே கோவில்களில் அறிவுக்கும் உணவு கொடுக்கலாம்.வளர்ந்த நாடுகளில் நூலகங்கள் சில தொலைவில் அமைந்து இருக்கிறது .நாம் நம் கோவில்களை புத்தகமா நிறைத்தால் அங்கு சரஸ்வதி தேவியை நாம் குடி அமர்த்தலாம் .இதற்கென்று தனி நூலகத்திற்கு பதில் கோவில்களை சிறு பகுதியை நூலமாக மாற்றி அமைத்திடலாம் .அறிவு பசிக்கும் ,வயிறு பசிக்கும் ஒரே இடத்தில நாம் இடம் இருக்கும் காரணத்தினால் அங்கே இறைவனின் அருள் உறுதியாக கிடைக்கும் .இதை அரசு கவனத்தில் வைக்குமா ?

அறிவியல் வளர்ச்சி நம் உடைய வாழ்க்கையின் பல செயல் பாடுகளில், சில வாழ்க்கையோடு ஒன்று இணைத்து காணபடுகிறது . எங்கள் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகம்  நடத்தும் 'annaedusat program '  செயல்படுகிறது.பல்கலைகழகதில் நடத்தும் விரி வுரையை எங்கள் கல்லூரியில் கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது .இந்த அறிவியல் யுக்தியை ஏன் நாம் மலை வாழ் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க  முடியாது ? மலை கிராமத்தில் சென்று வேலை பார்க்க ஆசிரியர் தயக்கம் இருப்பதால் இந்த தொழில் நுட்பத்தை  பயன் படுத்தி அங்கு உள்ள மக்களுக்கு கல்வியை சேர்க்க முடியும் அல்லவா!  அது மட்டும் இல்லாமல் ஆசிரியர் பற்றாகுறை இருக்கும் இடத்தில்  இதே  தொழில் நுட்பத்தை தற்காலிகமா பயன் படுத்த முடியும் .அரசு கேபிள் வாயிலாக இது போன்ற திட்டங்களை செயல் படுத்த முடியுமா ? என்று ஆலோசிக்கலாம் ? முன் வருமா அரசு !   

நம் நாடு பல இனங்கள் பல மொழிகள் கொண்ட தேசமாக இருக்கிறது .இங்கே ஒரு புறம் வற்றாத நதிகள் மற்றொருபுறம் பருவ மழையை சார்ந்து இருக்கும் நதிகள் .அதில் பருவமழையை சார்ந்து இருக்கும் நதி பல அரபிக் கடலில் கலவாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வங்க கடலில் கலக்கிறது .அதில் ஒரு நதியே காவேரி தாய்.பல சேய் களுக்கு சோறு உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பவள் .ஆனால் அந்த நீரை பகிர்த்து கொள்வதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது .பிற் காலத்தில் நாம் தண்ணீருக்காக போரிடும் அபாயம் இருப்பதால்    இன்றே நதி நீர் பங்களிப்பை சரி செய்வது ஆட்சி செலுத்துபவர்களின் கடமை .எனவே இங்கு இரண்டு தீர்வுகள் உள்ளன .ஒன்று  வற்றாத நதிகள்   பருவ மழையை சார்ந்து இருக்கும் நதிகள் உடன் இணைக்க வேண்டும் . மற்றொன்று இரு மாநிலங்களில் பாயும் நதிகளை மத்திய அரசும் அதிகாரத்தை வைத்துகொள்ள வேண்டும்.மத்திய அரசு தான் மாநிலங்களை ஒன்று இணைகிறது .அதனால் எவ்வாறு மாநிலங்கள் நெடுஞ்சாலை ,தேசிய நெடுஞ்சாலை என்று இருக்கிறதோ ?அதே போல் மாநில நதி, தேசிய நதி என்று நாம் உருவாக்கலாம் .அதன் மூலம் பிற்காலத்தில் உருவாகும் பிரச்னை களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் .இல்லையெனில் நீருக்காக நதிகளினில் மேல் போர் புரிந்து தீவீர வாதம் ஏற்பட்டு மாநிலங்கள் சிதற வாய்ப்பு இருக்கிறது .ஒன்று பட்ட இந்தியாவை நம் மக்கள் மேல் போர் தொடுத்து காக்க வேண்டி வரும் .இன்றே தங்கள் தவறை மறைக்க சிலர் நதி பங்கீடு மூலம் அரசியல் செய்கின்றனர் .பிற் காலத்தில் இதற்கு   பஞ்சம் இருக்காது ,பஞ்சம் மக்கள் இன்    வாழ்வில் இருக்கும் போது?  

அரக்கோணம் ரயில் விபத்து மனித தவறால் நடந்தது  என்று சாதாரணமாக முடித்து விடுகிறார்கள் .இதற்கு உண்மையான காரணம் ஆக பல விசயங்களை சரி பார்க்க வேண்டி வருகிறது .சுதந்திரம் அடைந்து எதற்காக ?நம்மை நம்மவர்கள் ஆட்சி செய்தால் நமக்கு அவர்கள் நன்மை செய்வார்கள் என்று தானே !ஆனால் இத்தனை காலம் அரசு சக்கரம் சுழன்று இருப்பதாய் பார்த்தால் அவ்வாறு தெரியவில்லை ?ரயில் விபதற்கு காரணம் அறிந்தால் 'signal'  பிரச்சனை என்கின்றனர் .செல்வதற்கு ஒரு பாதையும் வருவதற்கு ஒரு பாதையும் அமைக்க முடியாது இன்றளவும் இருப்பதால் நாம் எவ்வளவு உயிர்களை இழக்கிறோம் ?அறிவியல் வளர்வது கடை கோடி மனிதர்க்கும் பயன் இல்லையனில் அது எதற்காக ?ஒரு பக்கம் நிலவுக்கு போக அசை படுகிறோம் ,மறுபக்கம் பல உயிர்களை மண்ணிற்கு உணவாய் தருகின்றோம் .'bullet train ' போன்ற அதி நவீன ரயில்கள் வளரும் நாடுகளில் இருக்கும் போது இங்கே செல்வதற்கும் வருவதற்கும் கூட தனி தனி ஓடு பாதை  இல்லையனில் நாம் எந்த அளவிற்கு பின் நோக்கி இருக்கிறோம் என்று சீர் தூக்கி பார்க்க வேண்டும் .நமக்கு தேவை இழப்பீடு அல்ல !பிரச்சனைகளுக்கு தீர்வு !பணத்தை உயிர்களுக்கு கொடுத்து சரி கட்டுவதை நிறுத்தி ,உயிர்கள் இனிமேல் போகாமல் இருபதற்கு வழி செய்ய வேண்டும் .நாங்கள் வல்லரசு வேண்டும் என்று கேட்கவில்லை ,நல்லரசு போதும் என்று கேட்கிறோம் .

                  வெற்றிடங்கள் மாளிகை
 ஆக வேண்டாம் ! வீடாக மாறுமா? குடிசை வாசிகளுக்கு ...
நம் அனைவருக்கும் வீடு வேண்டும் என்ற ஆசை  அதிகரித்துகொண்டே போகிறது .அதுவும் சென்னை யில் அதிகரித்துகொண்டே போகும் வானுயுர்ந்த கட்டடங்கள் கிராமப்புற  மக்கள் மயக்கம் அடைய செய்கிறது  என்றால் அந்த கட்டடங்களை எழுப்ப அங்கே உள்ள குடிசை பகுதிகளை அகற்ற குடிசைகிளில் வசிக்கும் குடும்பத்துக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி எந்த ஒரு அவகாசமும் இன்றி அகற்றுவது சரி ஆன அணுகுமுறை யாக தெரியவில்லைஇந்திய சட்டத்தின்  படி குடிசையை அகற்றும் படி நேர்ந்தால் அதன் அருகாமையில் அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்று இந்தியா டுடே கட்டுரை குறிபிடுகிறது .பணம் இல்லாதவர்கள் சொல் பார்லிமென்ட் ஏறாது இல்லை சட்டசபை நுழையாது என்று புது பல மொழி உருவாகும் போல.குடிசை மாற்று வாரியம்  அவர்களுக்கு வீடு குடுக்க வேண்டும் .அது பெரும்பாலும் ஒதுக்கு புறத்தில் அமைந்து விடுவதால்  பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் ."சென்னை உள்ளே வீடு இல்லை, எல்லாம் இருக்கு" ,"சென்னை இன் வெளியே  வீடு இருக்கு மற்றது ஒன்னும் இல்லைஎன்ற துன்பம் தான் மிஞ்சுகிறது இதற்கு பில்டர் கள் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர்கிளிடம் கூறினால் இதற்கு சரியான தீர்வு ஏற்படலாம் .அவர் கள் வசிக்க மாளிகை கேட்க வில்லை சிறு இடம் தான் .சாதாரணமாக ஒரு இடத்தை பேசும் ரியல்-எஸ்டேட் அதிபர்கள் அந்த நிலத்தில் உரியவர்களுக்கு ஒரு பங்கு கொடுப்பார்கள் அதன் படி பார்த்தால் அவர்கள்(பில்டர்இவர்களுக்கும்(குடிசையில் வசிபவர்கள் பொறுப்பு எடுக்க வேண்டி வருது வீடு வசதி வாரியமும்   குடிசை மாற்று வாரியமும் யோசித்தால் நல்ல பலனை எதிர்பாக்கலாம் .250 சதுர அடியில் கூட அவர்களால் வாழ முடியும் .பசி இருப்பவர்களுக்கு  ருசி தேவை இல்லை .அது போல பசி யில் உள்ள அவர்களுக்கு எதோ ஒரு சாப்பாடு தவிர விருந்து  தேவை இல்லை .30 மாடி கட்டடங்கள் ஒரே வரிசையில் வான் நோக்கி கட்டும் போது இவர்களுக்கு தேவையான வற்றை கண்டிப்பாக சென்னை யின் நெஞ்சுக்குள் அமர்த்தலாம் பில்டர் களின் உதவியோடு பல இடங்களில் கருப்பு பணமே கட்டடங்கள் ஆக உயரும் போது    அதை உண்மையாக அனுபவிக்க வேண்டியவர்கள் விரட்ட படிகிறார்கள், அதை கிள்ளி  கொடுக்க  கூட முடியாத என்ன ?யோசிக்க வேண்டும் அனைவரும் !உலகம் சிலருக்கானது அல்ல !எல்லாருக்கும் ஆனது !