Monday, September 26, 2011


                  வெற்றிடங்கள் மாளிகை
 ஆக வேண்டாம் ! வீடாக மாறுமா? குடிசை வாசிகளுக்கு ...
நம் அனைவருக்கும் வீடு வேண்டும் என்ற ஆசை  அதிகரித்துகொண்டே போகிறது .அதுவும் சென்னை யில் அதிகரித்துகொண்டே போகும் வானுயுர்ந்த கட்டடங்கள் கிராமப்புற  மக்கள் மயக்கம் அடைய செய்கிறது  என்றால் அந்த கட்டடங்களை எழுப்ப அங்கே உள்ள குடிசை பகுதிகளை அகற்ற குடிசைகிளில் வசிக்கும் குடும்பத்துக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி எந்த ஒரு அவகாசமும் இன்றி அகற்றுவது சரி ஆன அணுகுமுறை யாக தெரியவில்லைஇந்திய சட்டத்தின்  படி குடிசையை அகற்றும் படி நேர்ந்தால் அதன் அருகாமையில் அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்று இந்தியா டுடே கட்டுரை குறிபிடுகிறது .பணம் இல்லாதவர்கள் சொல் பார்லிமென்ட் ஏறாது இல்லை சட்டசபை நுழையாது என்று புது பல மொழி உருவாகும் போல.குடிசை மாற்று வாரியம்  அவர்களுக்கு வீடு குடுக்க வேண்டும் .அது பெரும்பாலும் ஒதுக்கு புறத்தில் அமைந்து விடுவதால்  பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் ."சென்னை உள்ளே வீடு இல்லை, எல்லாம் இருக்கு" ,"சென்னை இன் வெளியே  வீடு இருக்கு மற்றது ஒன்னும் இல்லைஎன்ற துன்பம் தான் மிஞ்சுகிறது இதற்கு பில்டர் கள் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர்கிளிடம் கூறினால் இதற்கு சரியான தீர்வு ஏற்படலாம் .அவர் கள் வசிக்க மாளிகை கேட்க வில்லை சிறு இடம் தான் .சாதாரணமாக ஒரு இடத்தை பேசும் ரியல்-எஸ்டேட் அதிபர்கள் அந்த நிலத்தில் உரியவர்களுக்கு ஒரு பங்கு கொடுப்பார்கள் அதன் படி பார்த்தால் அவர்கள்(பில்டர்இவர்களுக்கும்(குடிசையில் வசிபவர்கள் பொறுப்பு எடுக்க வேண்டி வருது வீடு வசதி வாரியமும்   குடிசை மாற்று வாரியமும் யோசித்தால் நல்ல பலனை எதிர்பாக்கலாம் .250 சதுர அடியில் கூட அவர்களால் வாழ முடியும் .பசி இருப்பவர்களுக்கு  ருசி தேவை இல்லை .அது போல பசி யில் உள்ள அவர்களுக்கு எதோ ஒரு சாப்பாடு தவிர விருந்து  தேவை இல்லை .30 மாடி கட்டடங்கள் ஒரே வரிசையில் வான் நோக்கி கட்டும் போது இவர்களுக்கு தேவையான வற்றை கண்டிப்பாக சென்னை யின் நெஞ்சுக்குள் அமர்த்தலாம் பில்டர் களின் உதவியோடு பல இடங்களில் கருப்பு பணமே கட்டடங்கள் ஆக உயரும் போது    அதை உண்மையாக அனுபவிக்க வேண்டியவர்கள் விரட்ட படிகிறார்கள், அதை கிள்ளி  கொடுக்க  கூட முடியாத என்ன ?யோசிக்க வேண்டும் அனைவரும் !உலகம் சிலருக்கானது அல்ல !எல்லாருக்கும் ஆனது !

No comments:

Post a Comment