Monday, September 26, 2011


நம் நாடு பல இனங்கள் பல மொழிகள் கொண்ட தேசமாக இருக்கிறது .இங்கே ஒரு புறம் வற்றாத நதிகள் மற்றொருபுறம் பருவ மழையை சார்ந்து இருக்கும் நதிகள் .அதில் பருவமழையை சார்ந்து இருக்கும் நதி பல அரபிக் கடலில் கலவாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வங்க கடலில் கலக்கிறது .அதில் ஒரு நதியே காவேரி தாய்.பல சேய் களுக்கு சோறு உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பவள் .ஆனால் அந்த நீரை பகிர்த்து கொள்வதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது .பிற் காலத்தில் நாம் தண்ணீருக்காக போரிடும் அபாயம் இருப்பதால்    இன்றே நதி நீர் பங்களிப்பை சரி செய்வது ஆட்சி செலுத்துபவர்களின் கடமை .எனவே இங்கு இரண்டு தீர்வுகள் உள்ளன .ஒன்று  வற்றாத நதிகள்   பருவ மழையை சார்ந்து இருக்கும் நதிகள் உடன் இணைக்க வேண்டும் . மற்றொன்று இரு மாநிலங்களில் பாயும் நதிகளை மத்திய அரசும் அதிகாரத்தை வைத்துகொள்ள வேண்டும்.மத்திய அரசு தான் மாநிலங்களை ஒன்று இணைகிறது .அதனால் எவ்வாறு மாநிலங்கள் நெடுஞ்சாலை ,தேசிய நெடுஞ்சாலை என்று இருக்கிறதோ ?அதே போல் மாநில நதி, தேசிய நதி என்று நாம் உருவாக்கலாம் .அதன் மூலம் பிற்காலத்தில் உருவாகும் பிரச்னை களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் .இல்லையெனில் நீருக்காக நதிகளினில் மேல் போர் புரிந்து தீவீர வாதம் ஏற்பட்டு மாநிலங்கள் சிதற வாய்ப்பு இருக்கிறது .ஒன்று பட்ட இந்தியாவை நம் மக்கள் மேல் போர் தொடுத்து காக்க வேண்டி வரும் .இன்றே தங்கள் தவறை மறைக்க சிலர் நதி பங்கீடு மூலம் அரசியல் செய்கின்றனர் .பிற் காலத்தில் இதற்கு   பஞ்சம் இருக்காது ,பஞ்சம் மக்கள் இன்    வாழ்வில் இருக்கும் போது?  

No comments:

Post a Comment