Monday, September 26, 2011

அரக்கோணம் ரயில் விபத்து மனித தவறால் நடந்தது  என்று சாதாரணமாக முடித்து விடுகிறார்கள் .இதற்கு உண்மையான காரணம் ஆக பல விசயங்களை சரி பார்க்க வேண்டி வருகிறது .சுதந்திரம் அடைந்து எதற்காக ?நம்மை நம்மவர்கள் ஆட்சி செய்தால் நமக்கு அவர்கள் நன்மை செய்வார்கள் என்று தானே !ஆனால் இத்தனை காலம் அரசு சக்கரம் சுழன்று இருப்பதாய் பார்த்தால் அவ்வாறு தெரியவில்லை ?ரயில் விபதற்கு காரணம் அறிந்தால் 'signal'  பிரச்சனை என்கின்றனர் .செல்வதற்கு ஒரு பாதையும் வருவதற்கு ஒரு பாதையும் அமைக்க முடியாது இன்றளவும் இருப்பதால் நாம் எவ்வளவு உயிர்களை இழக்கிறோம் ?அறிவியல் வளர்வது கடை கோடி மனிதர்க்கும் பயன் இல்லையனில் அது எதற்காக ?ஒரு பக்கம் நிலவுக்கு போக அசை படுகிறோம் ,மறுபக்கம் பல உயிர்களை மண்ணிற்கு உணவாய் தருகின்றோம் .'bullet train ' போன்ற அதி நவீன ரயில்கள் வளரும் நாடுகளில் இருக்கும் போது இங்கே செல்வதற்கும் வருவதற்கும் கூட தனி தனி ஓடு பாதை  இல்லையனில் நாம் எந்த அளவிற்கு பின் நோக்கி இருக்கிறோம் என்று சீர் தூக்கி பார்க்க வேண்டும் .நமக்கு தேவை இழப்பீடு அல்ல !பிரச்சனைகளுக்கு தீர்வு !பணத்தை உயிர்களுக்கு கொடுத்து சரி கட்டுவதை நிறுத்தி ,உயிர்கள் இனிமேல் போகாமல் இருபதற்கு வழி செய்ய வேண்டும் .நாங்கள் வல்லரசு வேண்டும் என்று கேட்கவில்லை ,நல்லரசு போதும் என்று கேட்கிறோம் .

No comments:

Post a Comment